மாற்றத்திற்கு ஏற்றார்போல் மனிதன் மாறவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படும்போது, நிலைபெறா இவ்வுலகில் இவன் மட்டும், தன்னை நிலை நிறுத்த என்னுகிறான். அவ்வாறு, அதற்குத், தான் தன்னை, முற்படுத்த முனையும்போதுதான், மாற்றம் என்ற ஒன்றையே அவன் சந்திக்கிறான். கால மாற்றத்திற்கேற்றார் போல், தன்னை மாற்ற, அல்லது மாற இயலாத எவையும் இவ்வுலகில் நிலைத்து நிற்பதில்லை. இதனால் அவற்றின் வாழ்க்கையும் சொற்பமாக முடிவு பெறுகிறது. வெறும் மூன்றே காலங்களில், ஒரே ஒரு முறை வாழும் வாழ்கையில் நாம் சந்திக்கின்றவை ஏராளம். இவை தகவல்களாக மற்றும் செய்திகளாக சந்ததிகளுக்கு பரிமாற்றபடுகின்றன. இந்தச் செய்திகளும், தகவல்களும் வரலாறு எனத் தன்னை முன்னிறுத்திக் கொள்கின்றன. இருப்பினும் கால சூழ்ச்சிக்கும், ஞால சுழற்சிக்கும் இடையில் மனித ஞானத்திலிருந்து இவை மறக்கப்படுகின்றன. விருப்பத்திற்கேற்றார்போல சற்று மாற்றவும் படுகின்றன. ஆனால் சிறிது ஆழ்ந்து சிந்திப்போமானால் வரலாற்றின் மெய்மையானது சாமான்யனாலும் உணரபடுகிறது. முயற்சித்தால் அது பிறர்க்கு உணர்த்தவும் படுகிறது. நிச்சயமாக இக்கதையின் வழி பண்டைய காலம் செல்லும் அனுபவம் கிட்டும் என்ற நம்பிக்கையில், கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என்ற மூன்றுக்கும் இடையே சற்று சம்மந்தமும் உள்ளது என்பதை உணர்ந்து, கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால உண்மையையும், எதிர்கால இரகசியங்களையும் காண்பீர்கள் என்ற எதிர்பார்புடன் இதுவரை யவருக்கும் தெரிந்திராத ரகசியங்களையும்  உண்மைகளையும் அலசி ஆராய்ந்து, கற்பனையோடு பிணைத்துக் கட்டி கதையாக தொகுத்துள்ளேன். ஆகச் சிந்தையில் எழும் கேள்விகளை காலத்திடம் வினாவி, இந்த பதிவின் பேரில், மூன்று காலத்தின் தொடர்பில், வரலாற்றின் பல பரிணாமங்களையும், அவற்றின் பரிமாணங்களையும், அதன் மெய்மையையும் காண என்னுடன் சற்றே பயணித்து வாருங்கள்!                                                                                                                     இராம்ஸ்ரீனிவசன்
                                                                                                                         சேவு அர்ஜுன்

இக்கதையில் தோன்றும் அரசுகளும், பேரரசுகளும்

Comments

Popular Posts

CHAPTER 3

பகுதி-3

பகுதி-1